கடந்த 5 மாதங்களில் சாலை விபத்துக்களால் 110 பேர் சாவு
- சாகச பயணம் கூடாது
- கலெக்டர் அறிவுரை
ராணிப்பேட்டை:
தமிழம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சாலை விபத்துகள் தொடர்பாக ஆய்வு செய்ததில், 7,303 மரணங்கள் நிகழ்ந்துள்ளது.
இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 2,330, மாநில நெடுஞ்சாலைகளில்2,567, மாவட்ட சாலைகளில் 1,153, மற்றும் கிராமச் சாலைகளில் 1,253 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகள் மூலம் 110 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், குறிப்பாக மாநில நெடுஞ்சாலையில் 96 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 14 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து கலெக்டர் வளர்மதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பைக் சாலை விபத்து மரணங்களே அதிகம் என்பதுதான்.
எனவே, பைக்கில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்திருத்தல் வேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிவேகம் கொண்ட பைக்குகளை வாங்கித் தருவதை கைவிடுதல் வேண்டும்.
18 வயது நிரம்பாத, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்திட வேண்டும்.
பைக்கில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண் டும். அந்த இருவரும் ஹெல்மெட் அணிதல் வேண்டும். இவற்றைத் தவறாது கடைப்பிடித்தால், பைக் விபத்துகளில் உயிரிழப்பைக் கண்டிப்பாக தவிர்க்க முடியும்.
அதேபோல் கார்களில் பயணிப்போர் 'சீட் பெல்ட்' கண்டிப்பாக அணிந்துவாகனம் ஓட்ட வேண்டும், வாகனங்களின் டயர்களில் காற்றழுத்தம் சரியாக உள்ளதா, எரிபொருள் இருப்பு, பிரேக், ஒலிப்பான் ஆகியவை சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்த்த பின் னரே வாகனத்தை ஓட்ட வேண்டும்.
பார்வை குறைவான வளைவுகளில் முந்திச் செல்ல முயலுதல் மற்றும் அதிவேக பயணம், சாகசப் பயணங்கள் கூடாது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்க ளும் சாலை விதிகளைக் கண் டிப்பாக கடைப்பிடித்து சாலை விபத்து மரணங்கள் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.