உள்ளூர் செய்திகள்

உலக மலேரியா தின விழிப்புணர்வு முகாம்

Published On 2023-04-26 07:50 GMT   |   Update On 2023-04-26 07:50 GMT
  • ராமநாதபுரத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் முறை பற்றி மாவட்ட மலேரியா அலுவலர் பேசினார்.

பரமக்குடி

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமை தாங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ஹரிகரன் வரவேற்றார். மலேரியா காய்ச்சல் பரவும் விதம், காய்ச்சலை பரப்பும் கொசுக்களையும், கொசுப்பழுக்களையும் ஒழிக்கும் முறை பற்றியும், மலேரியா காய்ச்சலுக்கு உண்டான மருத்துவ சிகிச்சை பற்றியும் மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் பேசினார்.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா தலைமையில் மலேரியா ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மருத்துவ அலுவலர் மாலினி, சுகாதாரத்துறை துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கீர் முகமது நன்றி கூறினார்.

Tags:    

Similar News