உள்ளூர் செய்திகள்

விலங்குகளால் சேதமடைந்த பயிர்களை வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்

Published On 2023-01-11 09:27 GMT   |   Update On 2023-01-11 09:27 GMT
  • அபிராமம் பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், பாப்பனம், நகரத்தார் குறிச்சி, பள்ளபச்சேரி, உடையநாதபுரம், விரதக்குளம், காடனேரி, பொட்டகுளம் உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த பயிர்களை காட்டுப் பன்றி, மான்கள் சேதப்படுத்தி நாசம் செய்து வருகிறது. இது குறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.

பி்ன்னர் வன விலங்கு களிடம் பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து விவசாயி விரதக்குளம் கர்ணன் கூறுகையில், மான், காட்டுப்பன்றி, முயல், நரி போன்ற வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான கிராமங்களில் நிலக்கடலை, பயிறு வகைகள், கேப்பை போன்ற பயிர்களை சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டனர். வனத்துறையினர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News