உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு
- அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு, ஜவஹர் அலிகான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள் சல்மா பீவி, மஹ்ஜபின் சல்மா பீவி முன்னிலை வகித்தனர்.
பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஜெயந்தன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பழைய மாணவர்கள் கல்வியின் முக்கியத்த்துவம் குறித்த வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா நன்றி கூறினார்.