உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-10-01 13:41 IST   |   Update On 2023-10-01 13:41:00 IST
  • வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றார்.
  • காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பசும்பொன்

கமுதி பள்ளியில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மருத்துவ பரிசோதனை அரங்கம், இ.சி.ஜி. பிரிவு, எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை நிலையம், மருந்தகம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர் வழங்கினார். இம்முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதில் பொதுசுகா தாரத்துறைதுணை இயக்குநர் இந்திரா (பரமக்குடி), வட்டார மருத்துவ அலுவலர் ரமீஸ், கமுதி பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி, தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழ்செல்வி போஸ், துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார், இல்லம்தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் காவடி முருகன்(ஆனையூர்), பழனி அழகர்சாமி (கீழராமநதி), நாகரத்தினம் (பாக்கு வெட்டி), தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன், ஒன்றிய துணைச் செயலா ளர் நீதிராஜன், மருத்து வர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News