உள்ளூர் செய்திகள்

வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்

Published On 2023-08-03 06:38 GMT   |   Update On 2023-08-03 06:38 GMT
  • வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
  • அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் முளைக்கொட்டு உற்சவ விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கும்மி ஒயிலாட் டம் ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு வார காலமாக நடைபெற்றது. கோவி லில் இருந்து வழுதூர் பெரிய ஊரணி பகுதியில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குலவையிட்டு பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வழுதூர் கிராமத்தை சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து முளைப்பாரி களையும் பெரிய ஊரணி கரையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதே போல வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம் காத்தான், பால்குளம், படவெட்டி வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்ற முளைக்கொட்டு உற்சவ விழா நடை பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News