உள்ளூர் செய்திகள்

ஏர்வாடியில் சுகாதாரமின்றி செயல்படும் ஓட்டல்கள்

Published On 2022-08-02 14:08 IST   |   Update On 2022-08-02 14:08:00 IST
  • ஏர்வாடியில் சுகாதாரமின்றி செயல்படும் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்வே ண்டுதலுக்காக வருகின்றனர்.

இங்கு சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. அவற்றில் பிரியாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா ஆகியவை காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.

ஏர்வாடி ஓட்டல்கள், சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணைகளைமீண்டும் மீண்டும் பயன்படுத்துகி ன்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது போன்ற உணவுகளி னால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளி மாவட்ட பக்தர்கள் இந்த ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.

இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News