உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.

கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும்

Published On 2022-11-09 08:04 GMT   |   Update On 2022-11-09 08:04 GMT
  • கிராம பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
  • முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மேல்நிலைப்பள்ளி, நீராவி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமசாமி பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

அமைச்சர் ராஜ கன்ணப்பன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

அவர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளி குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை விரைவில் உருவாகும். கிராமங்கள் தோறும் பைப்லைன் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும். அதற்கான பணிகளை முதலமைச்சர் முடுக்கிவிட்டுள்ளார். தமிழுக்கு களங்கம் ஏற்படுத்தினால் கடுமையாக திராவிட இயக்கம் எதிர்க்கும்.

திராவிட தலைவர்களில் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு பிறகு மு.க.ஸ்டாலின் மட்டுமே உள்ளார். தமிழ்மக்களில் 88 சதவீதம் பேர் திராவிட இயக்கத்தில் உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. மந்திரி, எம்.எல்.ஏ. பதவி வரும்-போகும். எந்த பதவியில் இருந்தாலும் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

முதுகுளத்தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கமுதியில் மில் தொடங்கப்பட உள்ளது. நான் படிக்கும் காலத்தில் கிராமங்களுக்கு பஸ் வராது. 8 கி.மீ தூரம் நடந்து பள்ளிக்கு செல்வோம். இப்போது அப்படி இல்லை. கிராமங்களுக்கே பஸ் வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், பெருநாழி போஸ், முதுகுளத்தூர் பூபதி மணி, கடலாடி ஆறுமுகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News