உள்ளூர் செய்திகள்

பாசி விற்கும் பெண்களை பிடித்து போலீசார் விசாரணை

Published On 2022-08-23 13:51 IST   |   Update On 2022-08-23 13:51:00 IST
  • கும்பாபிஷேக விழாவில் நகை பறித்த பாசி விற்கும் பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் தர்மமுனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கீழச்சாக்குளம், ஏனாதி, கண்டிலான், பூங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அப்போது பெண் பக்தர்கள் சிலர், தாங்கள் அணிந்திருந்த நகைகளை காணோம் என கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழச்சாக்குளம் போஸ் மனைவி குருவம்மாளின் 11 பவுன் நகையும், ஏனாதி முத்து மனைவி பாரதியின் 1¼ பவுன் நகை, கீழச்சாக்குளம் பூச்சி மனைவி பாண்டியம்மாளின் 2 பவுன் நகை, பரமக்குடி கருப்பையா மனைவி காளிமுத்துவின் 3½ பவுன் நகை என மொத்தம் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் இளவரசு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்்த சம்பவம் தொடர்பாக பாசி விற்பனை செய்யும் 10 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News