உள்ளூர் செய்திகள்

செய்யது அப்பாஸ்.

டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும்

Published On 2022-09-29 08:37 GMT   |   Update On 2022-09-29 08:37 GMT
  • டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் வலியுறுத்தினார்.
  • இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

முதுகுளத்தூர்

ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை புனித தலமாக போற்றப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி வெட்ட மனை கிராமத்தில் தர்ஹா மெயின்ரோட்டில் பள்ளி அருகில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடை வழியாக மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை மாணவ- மாணவிகள் செல்லும் வழியில் போட்டு விட்டு செல்கின்றனர்.

மற்றொரு மதுபானக்க டை மனநல காப்பகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் செயல்படுகிறது. அங்கும் பலர் மது குடித்துவிட்டு செல்கின்றனர். இங்கு மதுகுடிக்கும் சிலர் பஸ் நிலையம் அருகில் இருப்பதால் மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே மயங்கி கிடக்கின்றனர். இந்த மதுபான கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை அங்கிருந்து அகற்றி ஊருக்கு வெளியே கொண்டு செல்லவேண்டும்.

ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஏர்வாடி ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News