உள்ளூர் செய்திகள்

ரமேஷ் கண்ணன்

தென்னிந்திய கபடி போட்டி

Published On 2023-08-08 08:51 GMT   |   Update On 2023-08-08 08:51 GMT
  • ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் மாதம் தென்னிந்திய கபடி போட்டி நடந்தது.
  • இந்த தகவலை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கபடி அணி தலைவர் ரமேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கபடி அணியின் தலைவர் ரமேஷ் கண்ணன் ராமநாதபுரத்தில் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கபடி அணி கடந்த 4 முறை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. வருகிற 11,12,13-ந் தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆல் இந்தியா சாம்பியன்ஷிப் கபடி போட்டி சென்னை யில் நடக்க இருக்கிறது.

இப்போட்டியில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கபடி அணி கலந்து கொள்கிறது.அதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கடற்கரை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வருகின்ற செப்டம்பர் 9,10-ம் தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு அணிக்கான வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் தென் இந்தியா அளவிலான மாற்றுதிறனாளிகள் சாம்பியன்ஷிப் போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற திட்ட மிடப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் நடத்து வதற்காகவும், மாவட்ட ஆட்சியரின் வாழ்த்து பெறுவதற்காகவும், இன்று அவரை நேரில் சந்திக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பேட்டியின் போது தமிழக மாற்றுத் திறனாளிகள் அணி கேப்டன் மகேஸ், துணை கேப்டன் ரமேஷ் மற்றும் அணி வீரர்கள் பிரவின், சரவணன், மோகன், அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News