உள்ளூர் செய்திகள்

கோடை விடுமுறை முடிந்த நிலையில் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி இன்று திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் பிரார்த்தனையில் ஈடுபட்ட போது எடுத்த படம். 

பள்ளிகள் இன்று திறப்பு

Published On 2023-06-12 08:03 GMT   |   Update On 2023-06-12 08:03 GMT
  • ராமநாதபுரம்- விருதுநகர்-சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
  • 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் தொடங்கின.

ராமநாதபுரம் மாவட்ட த்தில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, போகலூர், நயினார் கோயில், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் 157 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 36 அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகள், 22 தனியார் நடுநிலை பள்ளிகள் உள்ளன.

66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி கள், 27 தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளிகள், 56 தனி யார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இங்கு படித்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்ட இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்ததால் இன்று (12-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்தனர். முதல் நாளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் அறிமு கப்படுத்தி கொண்டனர்.

இதேபோல் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. 2 மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

வருகிற 14-ந்தேதி அன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

Tags:    

Similar News