உள்ளூர் செய்திகள்

குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டு புகை மூட்டம் எழுவதை படத்தில் காணலாம்.

குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம்

Published On 2022-06-18 09:13 GMT   |   Update On 2022-06-18 09:13 GMT
  • குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நுழைவு வாயில் அருகில் உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான கால்நடை மருத்துவமனை அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

அந்த பகுதியில் சேரக்கூடிய குப்பைகளை கீழக்கரை நுழைவாயில் அருகில் ஈ.சி.ஆர். சாலையில் சேகரித்து வைத்து அதனை அகற்றாமல் இருந்து வருவதால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடியவர்கள் முகம் சுழிக்கும் நிலை நீடிக்கிறது.

மேலும் ஊராட்சி ஊழி யர்கள் குப்பைகளை அகற்றாமல் தீ வைத்து எரிக்கின்றனர். அப்போது அருகில் உள்ள மரக்கடைக ளுக்கு தீவிபத்து ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.

மேலும் குப்பை நெருப்பில் இருந்து உருவா கும் புகை மண்டலம் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்தி ணறலை ஏற்படுத்துகிறது.

மேலும் அந்தப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படும் நிலை தொடர்ந்து வருவதால் இப்பகுதி பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனுக்குடன் குப்பைகளை அகற்ற வேண்டும். இது போல் தீ வைத்து எரிக்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News