உள்ளூர் செய்திகள்

துணை சுகாதார நிலையம் திறக்க கோரிக்கை

Published On 2022-07-26 13:38 IST   |   Update On 2022-07-26 13:38:00 IST
  • வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
  • விரைவில் வண்ணாங்குண்டு துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

ராமநாதபுரம்

எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் நஜீமுதின், வண்ணாங்குண்டு நகர் நிர்வாகிகள் அர்சாத், அல் நவ்பர், லாபிர் அலி, அசாருதீன், சபீக் அலி, அசன், சரீப், அல் பாசிம், சுஹைல், ஜீபைர், பஹத் ஆகியோர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பதற்கு தாமதம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்கள் பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். அவசர கால சிகிச்சை மேற்கொள்வதற்கும் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

கட்டி முடிக்கப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.விரைவில் வண்ணாங்குண்டு துணை சுகாதார நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.

Tags:    

Similar News