சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்ற கோரிக்கை
- சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை மாற்ற வி.சி.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2 தொட்டிகள் வடக்கு தெருவில் அமைந்துள்ளது. 50 வருடத்திற்கு மேலாக இந்த குடிநீர் தொட்டிகள் அங்கு உள்ளன. ஒரு தொட்டி ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர், மற்ெறாரு தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
தற்போது இந்த தொட்டிகள் சேதமடைந் துள்ளன. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கீழக்கரை நகர செயலாளர் பாசித் இல்யாஸ் கூறுகையில், கீழக்கரையில் உள்ள 2 குடிநீர் தேக்க தொட்டிகள் மிகவும் பழு தடைந்துள்ளது. அடிக்கடி மின் மோட்டார் வேலை செய்யாத காரணத்தால் கீழக்கரை பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
கீழக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட பைப் லைன்கள் பொதுமக்கள் பணம் கட்டி மண்டலம் வாரியாக வீடு தேவைகளுக்கு உபயோகப் படுத்துகிறார்கள். பொது மக்களும் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை செலுத்தி விட்டு பைப் லைன் இணைப்புகளுக்கு பணம் கட்டுகிறார்கள். தண்ணீர் வரியும் செலுத்துகிறார்கள்.
அரசு சார்பாகவும் 39 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைவதால் கீழக்கரை மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாமல் போகிறது. கடற்கரை ஓரங்களில் உப்பு தண்ணீராக வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகி றார்கள்.
அரசு புதிதாக தொட்டி கள் கட்டும் வரை மின் மோட்டார் படிக்கட்டு கள் கட்ட வேண்டும். 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய தொட்டிகள் கட்ட வேண்டும். எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து புதிய மோட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.