உள்ளூர் செய்திகள்

ரேசன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published On 2023-05-29 07:41 GMT   |   Update On 2023-05-29 07:41 GMT
  • ரேசன் கடை ஊழியர்கள் 14-ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
  • 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொதுவிநியோகத் திட்டத்திற்கு தனித்துறை, பொருட்களை பொட்டலங் களாக வழங்க வேண்டும், 60 வயது வரை பணி செய்து விட்டு பணிநிறைவு பெற்று வீட்டிற்கு செல்லும் போது எந்த பண பலனும் கிடைக் காமல் பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

ஓய்வூதியம் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஒரு பொருளுக்கு இருமுறை பில் போடும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

விற்பனை முனையங்களில் 4ஜி இணைப்பு வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்கப் பட்ட பின்னர் காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இதனை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மாநில பதிவாளர் அலுவலகம் முன்பு வருகிற 9-ந்தேதி மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்பும் கோரிக்கைகள் ஏற்கப்படா விடில் வருகிற 14-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News