உள்ளூர் செய்திகள்

கருப்பட்டி தயாரிக்க மானியத்துடன் கடன் வழங்க கோரி மனு

Published On 2022-09-13 08:07 GMT   |   Update On 2022-09-13 08:07 GMT
  • கருப்பட்டி தயாரிக்க மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
  • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி பகுதியில் கருப்பட்டி தயாரிப்புதான் அந்த பகுதி மக்களின் பிரதான தொழில் ஆகும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி வி.வி.ஆர்.நகர், லால்பகதுார் சாஸ்திரி தெருவில் 100-க்கும் மேற்பட்டகுடியிருப்புகள் உள்ளன. கருப்பட்டி தயாரிப்புதான் இவர்களின் பிரதான தொழில் ஆகும்.

ஆண்டுக்கு 6 மாதம் இந்த தொழிலில் வருமானம் கிடைக்கிறது.அதன்பின்னர் பதனீர் சீசன் இல்லாதால்அன்றாட வருமானத்திற்கு சிரமப்படுகின்றனர். இந்த பகுதி பெண்கள் 2018-ம் ஆண்டு பனைத்தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்துடன் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி முறையாக கட்டி முடித்துள்ளனர்.

அதன் பிறகு அரசு மானியத்துடன்கடன் வழங்கவில்லை. மீண்டும் அரசு மானியத்துடன் வங்கியில் கடன் வழங்க வேண்டும் என்று வி.வி.ஆர்.நகர் தலைவி அந்தோணியம்மாள் தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு கொடுத்தனர்.

அவர்கள் கூறுகையில், ஆண்டு தோறும் தை முதல் ஆவணி வரை கருப்பட்டி தயாரித்து விற்கிறோம். வியாபாரிகளிடம் முன்பணம் வாங்குவதால் குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரிகள் அதிக லாபம் அடைகின்றனர். ஏற்கனவே வங்கியில் கடன் கொடுத்தனர். தற்போது சில புரோக்கர்கள் ரூ.10 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக பேரம் பேசுகின்றனர். கடந்த முறை வாங்கிய கடனை முறையாக கட்டியுள்ளோம். எனவே எங்களுக்கு சிறு தொழில் மேம்பாட்டு திட்டத்தில் வங்கியில் அரசு மானியத்தில் கடன் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News