உள்ளூர் செய்திகள்

மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மகளிர் அணி தலைவி லட்சுமிதேவி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜனதா மகளிரணி ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-21 14:26 IST   |   Update On 2023-05-21 14:26:00 IST
  • ராமநாதபுரத்தில் பா.ஜனதா மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம்

தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமிதேவி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வை யாளர் முரளிதரன் அனை வரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

பா.ஜனதா நிர்வாகிகள் சண்முகராஜா,பவர் நாகேந்திரன்,கலாராணி, கவுன்சிலர்கள் குமார், முருகன், மண்டல தலை வர்கள் வீரபாகு, ஜோதிமுரு கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News