உள்ளூர் செய்திகள்

ராணுவ வீரர் பழனியின் மனைவி, குழந்தைகளுடன் மணிமண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராணுவ வீரருக்கு கட்டப்பட்ட மணிமண்டபம் திறப்பு

Published On 2022-06-06 09:26 GMT   |   Update On 2022-06-06 09:26 GMT
  • தொண்டி அருகே ராணுவ வீரருக்கு மணிமண்டபம் திறப்பு - மனைவி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • ராணுவ வீரர் பழனியின் மனைவி, குழந்தைகளுடன் மணிமண்டபம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி (வீர் சக்ரா) கடந்த

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி இந்திய- சீன எல்லையான லடாக் பகுதியில் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார்.

அவரது உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக மணிமண்டபம் கட்ட அவரது பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் அவரது பெற்றோர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தங்களது சொந்த செலவில் தன் மகனுக்கு மணிமண்டபம் அமைத்தனர். அதனை பழனியின் தாயார் லோகம்பாள்-தந்தை காளிமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிலையில் பழனியின் மனைவி மணிமண்டபம் திறப்பு விழாவில் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது குழந்தை மற்றும் பெற்றோர்களுடன் மணி மண்டபம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News