உள்ளூர் செய்திகள்

மண்டபம் ஹெலிபேட் தளத்தில் முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள்-எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு

Published On 2023-08-12 12:37 IST   |   Update On 2023-08-12 12:37:00 IST
  • ராமநாதபுரத்துக்கு முதல்-அமைச்சர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
  • நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மண்டபம்

ராமநாதபுரத்தில் வருகிற 17-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல் மண்டபம் கேம்ப்பில் வருகிற 18-ந் தேதி மீனவர் மாநாடு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக ராம நாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வருகிற 18-ந்தேதி மண்டபத்தில் நடைபெற உள்ள மீனவர் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக மண்டபம் கேம்ப் ஹெலிபேட் தளம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மேடை அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ராஜ கண்ணப்பன் எம்.எல்.ஏ.க் கள் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ உத்தரவின் பேரில் மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் சிறப்பாக செய்து வருகிறார்.

மேடை ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர்கான், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் இன்பாரகு, மாநில விவசாய அணி துணைச்செயலாள ரும், முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான முருகவேல், மண்டபம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதிக் பாட்ஷா, வாசிம் அக்ரம், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் பி.ஜி.சுகுமார், அயலக அணி துணை அமைப்பாளர் காதர்ஜான், தி.மு.க நிர்வாகிகள் ஆசாத், அயூப்கான், முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News