கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம்
- சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.
ராமநாதபுரம்
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப் படவேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் விஷ்ணு சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் சுதந்திர தின விழாவில் தியாகிகளை கவுரவித்தல், பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவி களுக்கான கலை நிகழ்ச்சி கள் குறித்து திட்டமிடுதல், பொதுமக்கள் பங்கேற்ப தற்கான முன்னேற்பாடு களை செய்தல் ஆகிய தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோ சனை நடத்தினார். அலுவலர்கள் திட்டமிட்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவு றுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) மாரிச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.