உள்ளூர் செய்திகள்

அப்துல் ரசாக்

மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா

Published On 2023-10-07 07:06 GMT   |   Update On 2023-10-07 07:06 GMT
  • மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.
  • பி.வி.எம். அறக்கட்டளை மீடியா பெடரேசன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் மனவளர்ச்சி குன்றியோருக்கான புதிய இல்லம் திறப்பு விழா நாளை நடக்கிறது.

ராமநாதபுரம் நகரில் கடந்த 2006-ம் ஆண்டு பி.வி.எம். அறக்கட்டளை தேசிய விருதாளரும், பிரஸ் மற்றும் மீடியா பெடரேசன் தேசிய தலைவருமான டாக்டர் அப்துல் ரசாக் என்பவரால் தொடங்கப்பட்டு மனவளர்ச்சி குன்றியோருக்கான மையம் பாரதி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. இங்கு ஏராள மான முதியோர், மன வளர்ச்சி குன்றிய இளைஞர்கள் தங்கவைக்கப்பட்டு மருத்துவம், உணவு, கல்வி போன்றவை வழங்கப்பட்டது.

தற்போது நன்கொடையா ளர்கள் உதவியுடன் ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி ஆர். சாலையில் பள்ள பச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் மனவளர்ச்சி குன்றி யோருக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

விழாவிற்கு பி.வி.எம்.அறக்கட்டளை நிறுவனர் அப்துல் ரசாக் தலைமை தாங்குகிறார். சித்தார் கோட்டை முஸ்லிம் முன்னாள் ஜமாத் தலைவர் அல்தாப் உசேன் வரவேற்கிறார்.

தொடர்ந்து மலேசியா பிரபல ஆடிட்டர் அன்சாரி இப்ராஹிம் தலைமையில் நடைபெறும் விழாவில் மலேசியா தொழிலதிபர்க ளும், நன்கொடையாளர்க ளுமான சித்தார்கோட்டை முகமதியா பள்ளிகளின் துணைத்தலைவர் முகம்மது ஷாஜகான், மலேசியா கோபத்தா குரூப் நிறுவ னங்களின் தலைவர் பனைக் குளத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம். மலேசியா தொழிலதிபர் புதுவலசை யைச்சேர்ந்த அலிக்கான், இருமேனி கிராமத்தை சேர்ந்த மலேசிய தொழில் அதிபர் எஸ்.எம்.எஸ்.ரபிக்தீன் சகோதரர்கள், மலேசிய தூதரக ஜெனரல் கவுரவ தூதர் சென்னை சரவணக்குமார், புதுமடம் வடக்குத்தெரு பொருளாளர் சாகுல்ஹமீது, சிங்கப்பூர் தொழிலதிபர் டாக்டர் பைஜு ஜிப்ரி உள்ளிட் டோர் புதிய கட்டிடங்களை திறந்து வைக்கின்றனர்.

முன்னதாக சித்தார் கோட்டை முகமதியா பள்ளி களின் முன்னாள் தலைவ ரும், அன்னை பாத்து முத்து ஜொகரா அறக்கட்டளை நிறுவனரும், மறைந்த தஸ்தக் கீரை நினைவு கூறும் வகையில், அறக்கட்டளை நிறுவ னர் அப்துல் ரசாக் தலைமையில் சிறப்புதுவா நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பல்வேறு சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விருதுகள், கேட யம், பதக்கம் வழங்கப்படு கிறது. இதில் ராமநாதபுரம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மாவட்ட அதிகாரி பாலசுந்தரம், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் அகமது உசேன் ஆசிப், கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், திருப்புல் லாணி யூனியன் தலைவர் புல்லாணி, கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன். திருப்புல்லாணி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா, தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா. பி.வி.எம். மனநல காப்பக கட்டிடத்தை கட்டிய கீழக்கரை கே.எம்.எம்.சுல்தான் சம்சூல்கபிர், என்ஜினீயர் பிரபாகரன் மற் றும் அரசியல் கட்சி பிரமுகர் கள். உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், இந்து சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை காப்பக நிறுவனர் அப்துல் ரசாக், பி.வி.எம். அறக்கட்டளை தலைவர் பக்கீர் முகமது அறக்கட்டளை மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் யாசர் அரபாத், சானாஸ்கான், முகமது யாசிர், குமார், யூனுஸ்கான், மன்சூர் உள்ளிட்டவர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News