உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார்.

ஓட்டுப்பதிவு எந்திரங்களின் தரம் குறித்து பொறியாளர் குழு ஆய்வு

Published On 2023-07-03 07:04 GMT   |   Update On 2023-07-03 07:04 GMT
  • ஓட்டுப்பதிவு எந்திரங்களின் தரம் குறித்து பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
  • தேர்தல் தாசில்தார் ரவி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தி லுள்ள மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரக் கிடங்கை கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதா வது:-

இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுரைப்படி மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரக்கிடங்கில் பாதுகாப் பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நாளை முதல் ஒருமாத காலத்திற்கு பெங்க ளூர் பெல் நிறு வனம் மூலம் பொறியாளர்களால் அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களும் தரத்தன்மை குறித்து பரி சோதிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமு கர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுபதிவு எந்திரங்களில் பராமரிப்பு பணிகளை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பதுடன் இந்த பணிகள் முடியும் வரை முழுமையாக பாதுகாப்பு பணியில் போலீ சார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் மாரி செல்வி, தேர்தல் தாசில்தார் ரவி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News