உள்ளூர் செய்திகள்

டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

Published On 2023-10-11 07:58 GMT   |   Update On 2023-10-11 07:58 GMT
  • கமுதியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வலியுறுத்தினார்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போல் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.மேலாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் பேசுகையில், மழை காலம் தொடங்கிவிட்டன. ஆனால் போதுமான மழை பெய்யவில்லை. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிராமப்பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. கமுதி யூனியனில் 30 பேரை சுகாதார பணியாளர்களாக நியமனம் செய்துள்ளோம். அவர்கள் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை வார்டு கவுன்சிலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News