உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2023-03-08 12:42 IST   |   Update On 2023-03-08 12:42:00 IST
  • தொண்டி பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியானது முதல் நிலை பேரூராட்சி பகுதியாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது. இங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சிதம்பரம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளிலிருந்து ஏர்வாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் அரசு மற்றும் சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து செல்கிறது.

இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், பஸ் நிலைய பகுதியில் குற்றச் ம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையிலும் ஹைமாஸ் எனப்படும் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி எம்.பி. நிதியில் இருந்து ரூ.4½ லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர் கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News