உள்ளூர் செய்திகள்

மலேசியா பாண்டியன்.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மனித சங்கிலி

Published On 2022-10-08 13:29 IST   |   Update On 2022-10-08 13:29:00 IST
  • ராமநாதபுரத்தில் வருகிற 11-ந் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் மனித சங்கிலி நடைபெறுகிறது.
  • முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக் குழு தலைவரும், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் பரமக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசை கண்டித்து வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தை, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.முதுகுளத்தூரில் நடை பெறும் போராட்டம் எனது தலைமையிலும், ராமநாதபுரத்தில் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, கோபால் தலைமையிலும், பரமக்குடியில் பொறுப்புக் குழு உறுப்பினர் கோட்டை முத்து தலைமையிலும், தொண்டியில் பொறுப்புக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன் தலைமையிலும், ராமேசுவரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜன் தலைமையிலும் நடக்கிறது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.

மறுநாள் (12-ந்தேதி) ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News