உள்ளூர் செய்திகள்

வகுப்பறை கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-09-06 12:39 IST   |   Update On 2023-09-06 12:39:00 IST
  • வகுப்பறை கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டதை பார்வையிட்டு உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அந்த உணவை அவரும் சாப்பிட்டார்.

நாள்தோறும் காலை உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்கு செல்ல வேண்டுமென மாணவ-மாணவிகளிடம் கூறினார். அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி காலை உணவுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டுமென பணியாளர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, சாம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டார். பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News