உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2023-02-02 12:17 IST   |   Update On 2023-02-02 12:17:00 IST
  • புத்தக திருவிழா ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
  • ராமநாதபுரத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது.

இதில் 100 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நாள் தோறும் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரங்கம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார முறையில் உணவகம், குடி நீர், கழிப்பறை, பார்க்கிங் வசதிகள், உள்ளே வெளியே செல்வதற்கு தனி வழிகள் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு உதவி செயற் பொறியாளர் குருதி வேல், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய குமார், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News