உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

Published On 2023-08-25 07:52 GMT   |   Update On 2023-08-25 07:52 GMT
  • காலை உணவு திட்டம் விரிவாக்கத்தத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
  • தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

மண்டபம்

தமிழகத்தில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு அதிகரித்ததாக புள்ளி விவரங்கள் தெரி வித்தன. இதையடுத்து இந்த திட்டத்தை விரி வாக்கம் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி மாநிலம் முழுவதும் காலை உணவு விரிவாக்க திட்டம் இன்று தொடங்கி வைக்கப் படுகிறது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள இருமேனி ஊராட்சி, குப்பானிவலசை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று காலை காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப் பன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், எம்.எல்.ஏ-க்கள் கருமாணிக்கம், முருகேசன், ராமநாதபுரம் தாசில்தார் ஸ்ரீதர், மண்டபம் ஒன்றிய சேர்மன் சுப்பு லட்சுமி ஜீவானந்தம், தி.மு.க மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் தேர்போகி முத்துக்குமார், மண்டபம் கிழக்கு ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் தவுபீக் அலி, ஊராட்சி மன்றத் தலை வர்கள் சிவக்குமார், காமில் உசேன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News