உள்ளூர் செய்திகள்

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தன்னார்வ ரத்த தான முகாம் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடந்தது.

கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்

Published On 2023-02-17 08:19 GMT   |   Update On 2023-02-17 08:19 GMT
  • கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
  • ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.

கீழக்கரை

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமூக மேம்பாடு (கனடா - இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டம்), கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து தன்னார்வ ரத்த தான முகாமை கல்லூரியின் முதல்வர் அலாவுதீன் தலைமையேற்று தொடங்கி வைத்து ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் பால சுப்ரமணியன் வரவேற்றார்.துணை முதல்வர் சேக் தாவூத், ரோட்டரி சங்க தலைவர் சம்சூல் கபீர் ஆகியோர் ரத்ததானம் செய்வது எப்படி நம் ஆளுமையை வடிவமைக்கிறது என்பது குறித்தும், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த வங்கி மேலாளர் ரவி ரத்ததானம் கொடுப்ப வருக்கும், பெறுபவர்க்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ரத்த சேகரிப்பு மருத்துவ குழுவினரிடம் பயிலக மாணவர்கள் 96 பேர் ரத்தம் தானம் அளிக்க ஆர்வத்துடன் முன் வந்தனர்.

முடிவில் கல்லூரியின் கனடா இந்தியா கூட்டுப் பயிலகத் திட்டத்தின் தொடர் கல்வி மேலாளர் நாகராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கீழக்கரை ரோட்டரி சங்க செயலர் சுப்ரமணியன், மரியதாஸ், எபன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News