உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மராத்தான் போட்டி

Published On 2023-08-08 08:49 GMT   |   Update On 2023-08-08 08:49 GMT
  • பரமக்குடியில் புத்தக திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.
  • துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பரமக்குடி

பரமக்குடியில் உள்ள மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இணைந்து இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை புத்தக கண்காட்சி திருவிழாவை நடத்துகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் புத்தக கண்காட்சியில் தினந்தோறும் மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பிரபலங்கள் பங்கேற்கும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை துப்புரவு பணியாளர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி சுமார் 7 கிலோமீட்டர் தூரம் கடந்து பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை திடலில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த போட்டியினை புத்தகக் கண்காட்சி வரவேற்பு குழு தலைவர் சேகர் செயலாளர் வழக்கறிஞர் பசுமலை,ஒருங்கிணைப்பாளர்கள் சந்தியாக பெருமாள் ராஜா உள்ளிட்ட புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News