உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற வீரர்களுடன் கல்லூரி செயலாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா, இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி உள்ளனர்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி: மாநில அளவிலான கைப்பந்து, கிரிக்கெட் போட்டி

Published On 2022-10-11 08:00 GMT   |   Update On 2022-10-11 08:00 GMT
  • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
  • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் இ.எம். அப்துல்லா பிறந்த நாளை முன்னிட்டும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகளும் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு துறைகளிலும் இணைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவ-மாணவிகள் தனக்கென்று தனித்துவம் வாய்ந்த விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி கலந்து கொண்டார். கைப்பந்துப் போட்டிகளில் 18 அணிகளை சேர்ந்த வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் 17 அணிகளை சேர்ந்த வீரர்களும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டிகளில் 7 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை செயின்ட்ஜோசப் பொறியியல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராமநா தபுரம் வேலுமனோகரன் கலைக்கல்லூரியும் கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் போட்டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கோப்பையை வென்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு சிறப்பு விருந்தினர் ரியாஸ் முகம்மது நபி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News