உள்ளூர் செய்திகள்

உதவி தொகையால் உயர்கல்வி படிக்கும் சிரமம் குறைந்தது-மாணவிகள் நெகிழ்ச்சி

Published On 2023-02-18 08:04 GMT   |   Update On 2023-02-18 08:04 GMT
  • அரசு வழங்கும் உதவி தொகையால் உயர்கல்வி படிக்கும் சிரமம் குறைந்தது.
  • ராமநாதபுரம் மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்

தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரால் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டம் கல்லூரி மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 6-ம் வகுப்பில் படிக்கக் கூடியவர்கள் தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து முடித்து மேற்படிப்பிற்கு கல்லூரிக்கு செல்லுகின்ற நேரத்தில் அவர்களுககு வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துகின்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் பயன்பெற்று வரும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ரையானா பர்வீன் கூறியதா வது:- எனது தந்தை முஹமது இன்சா துல்லா ஹ்கான். தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். எனது குடும்பத்தில் எனது தந்தை மட்டுமே வேலைக்குச்சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார். எனது தந்தையின் வருமானம் வீட்டு செலவுகளுக்கு சரியாக உள்ளதால் என்னுடைய கல்லூரி படிப்பிற்கான தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் சிரமமாக இருந்து வந்தது.

தற்போது தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தினால் எனக்கு மாதம் ரூ. 1000 கிடைக்கிறது. இதன் மூலம் நான் எனது படிப்பிற்கு உதவக்கூடிய உபகரணங்களை என்னுடைய தந்தையை சிரமப்படுத்தாமல் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் மாணவி பாண்டி ச்செல்வி கூறியதா வது:-

என் தந்தை பாண்டி. கூலி வேலை செய்து வருகிறார். என் தந்தை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் என்னை படிக்க வைப்பதை எண்ணி பல நாட்கள் கவலையில் இருந்தேன்.

தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி திட்டத்தின் மூலம் எனக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கிறது. அதனை வைத்துக்கொண்டு என்னுடைய கல்விக்கு ஆகும் செலவுகளை நானே செலவு செய்து கொள்வேன் என்றார்.

Tags:    

Similar News