உள்ளூர் செய்திகள்

ஈமான் அமைப்பு பொதுச்செயலாளர் ஹமீது யாசினுக்கு, முன்னாள் சேர்மன் பஷீர் அகமது பொன்னாடை போர்த்தினார். அருகில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா உள்ளார்.

வெளிநாட்டில் எதிர்பாராமல் இறப்பவர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை

Published On 2022-08-27 06:51 GMT   |   Update On 2022-08-27 06:51 GMT
  • வெளிநாட்டில் எதிர்பாராமல் இறப்பவர்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் தெரிவித்துள்ளார்.
  • பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

கீழக்கரை

ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 வருடத்திற்கான உயரிய கோல்டன் விசாவானாது தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவையில் ஈடுபட்டவர்களை கவுரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது.

மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கி உள்ளது. அமீரகத்தில் மனித நேயத்திற்கான அங்கீகாரம் பெற்று கோல்டன் விசா பெற்ற கீழக்கரையை சேர்ந்த ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் கீழக்கரை வந்தார்.

கீழக்கரை நகர்மன்ற அலுவலகத்தில் சேர்மன் செஹனாஸ் ஆபிதா, தி.மு.க. நகர் செயலாளர் பசீர் அஹமது, கீழக்கரை மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

முன்னதாக கீழக்கரை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்- நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் நகர் எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் கூறியதாவது:-

அமீரகத்தில் அரசின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கும் ஈமான் அமைப்பு தலைவர் பி.எஸ்.எம் ஹபிபுல்லா கான் ஆலோசனைையின் பேரில், அனைத்து சமுதாய மக்களுக்கும் பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து மக்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்று வருகிறது.

அமீரகத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போகும் தமிழ் தொழிலாளர்களின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்துள்ளோம். இது தவிர மருத்துவ, கல்வி உதவியும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News