உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
- ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரை சேர்ந்த சித்ராதேவி(35). இவரது தந்தை குண்டு (63). இவர் காலையில் டீ குடிக்க சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த முத்தையா மகன் பிருதிவிராஜ்(48) மோட்டார் சைக்கிளில் சென்றவர், முதியவர் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த முதியவர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிரிதிவிராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.