உள்ளூர் செய்திகள்

புதிய வாகன சட்டத்தை கண்டித்து கோத்தகிரியில் பேரணி- ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-17 14:45 IST   |   Update On 2022-11-17 14:45:00 IST
  • அபராத தொகை கட்ட முடியாமல் திணறி வந்தனர்.
  • 100 -க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இதில் பங்கேற்றனர்.

கோத்தகிரி,

நாடு முழுவதும் கடந்த மாதம் புதிய போக்குவரத்து சட்டம் அமலுக்கு வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து விதி மீறல்களுக்கும் அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் வாடகை வாகனம் ஓட்டும் ஆட்டோ, கார், லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அபராத தொகை கட்ட முடியாமல் திணறி வந்தனர்.

இந்த புதிய வாகன சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக நீலமலை அனைத்து தொழிலாளர்கள் சங்கம், வாகன பிரிவு மற்றும் கோத்தகிரி வட்டார வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் ஒன்றிணைந்து கோத்தகிரி காமராஜர் சதுக்கம் முதல் கோத்தகிரி மார்க்கெட் திடல் வரை பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100 -க்கும் மேற்பட்ட டிரைவர்கள் இதில் பங்கேற்றனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவும், புதிதாக போடப்பட்ட வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போக்குவரத்து அபராத தொகையை குறைக்க வேண்டும் என்பன போன்று கோஷங்கள் எழுப்பினர். 

Tags:    

Similar News