உள்ளூர் செய்திகள்

ரப்பர் படகுகளை கூடுதல் கலெக்டா சுகபுத்ரா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

திருப்பனந்தாள் பேரூராட்சியில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள்

Published On 2022-11-03 15:56 IST   |   Update On 2022-11-03 15:56:00 IST
  • மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்–பட்டிருந்த ரப்பர் படகு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
  • பேரிடர் காலங்களில் பேரூராட்சியில் இருக்க வேண்டிய தளவாட பொருட்–களான மண்–மூட்டைகள், மரக்கம்புகள், மரமறுக்கும் எந்திரம், ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பேரூ–ராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் கூடுதல் கலெக்டர்ர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பேரூராட்சி பகுதியில் குறைந்த அளவு பாதிப்படையக்கூடிய பகுதிகள் மற்றும் மழைக்–காலங்களில் அப்பகுதியில் உள்ளவர்களை பாது–காப்பான இடங்களில் தங்க வைப்பது தொடர்பாக, பேரிடர் காலங்களில் பேரூராட்சியில் இருக்க வேண்டிய தளவாட பொருட்–களான மண்–மூட்டைகள், மரக்கம்புகள், மரமறுக்கும் எந்திரம், ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு வசதியாக தயார் நிலையில் வைக்கப்–பட்டிருந்த ரப்பர் படகு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கனகராஜ், செயல் அலுவலர் ராஜதுரை, தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி சப்பாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News