உள்ளூர் செய்திகள்

வெறிநோய் தடுப்பூசி முகாம்

Published On 2023-01-11 08:10 GMT   |   Update On 2023-01-11 08:10 GMT
  • 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
  • பொது–மக்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு.

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோரின் அறிவுறுத்தல்படி நடைபெற்றது.

முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர் பெரோஸ் முகமது, ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்நடை உதவி மருத்துவர் முத்துகுமரன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் கால்நடை உதவி மருத்து–வர்கள் பிரியதர்ஷினி, சிவப்பிரியா, அருண், பூபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் விலங்குகள் வதை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முகாமில் கட்டுமாவடி, புறாக்கிராமம், தண்டாளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்த 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

முகாமில் உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி, கால்நடை ஆய்வாளர் பாரிவேந்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News