ஆலங்குடியில் களையிழந்த தீபாவளி விற்பனை
- ஆலங்குடியில் தீபாவளி விற்பனை களையிழந்து காணப்படுகிறது.
- கலக்கத்தில் வியாபாரிகள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுமார் 20, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடலை மில்களும், நெல் அரவை மில்களும் அதிக அளவில் இ ங்கி வருகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்க னோர் இங்கு கூலி வேலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆலங்குடியில்
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக அளவில் வியா பாரம் நடைபெறும் என்று மளிகை, ஜவுளிஇ பட்டாசு வியபாரிகள் அதிகளவில் முதலீடு செய்து பொருகளை இறக்குமதி செய்து இருந்தனர்.
ஆனால் தீபாவளிக்க ஒரு நாளே மீதமுள்ள நிலையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடிகிடக்கின்றன. மேலும் எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கடைகளில் பொருட்களை வாங்க ஆட்கள் யாருமின்றி வியபாரிகள் வழி மேல் விழி வைத்து காத்துள்ளனர்.
தீபாவளி வியாபாரம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்தவர்கள் எவ்வாறு பணத்தை திருப் பிக் கொடுப்பது என்று கலக்கமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையின்போது அதிக அளவில் வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு வியாபாரம் இல்லாமல் போனதால் காரணம் புரியாமல் வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளிக்கு மற்ற இடங்களில் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் ஆலங்குடியில் வழக்கத்தைவிட வியாபாரம் குறைந்துள்ளதால் வியாபாரிகள் என்ன செய்வதென்றே புரியாமல் தவித்து வருகின்றனர்.