உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் விவசாயிகளுக்கு தரமான பயிர் விதை உற்பத்தி குறித்த பயிற்சி முகாம்

Published On 2022-08-08 14:43 IST   |   Update On 2022-08-08 14:43:00 IST
  • விதைப் பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
  • விதைக்கும் முன் உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான் கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் அதிக அளவு பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்க முடியும்

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு உள்ளான விதைப் பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

பயிற்சிக்கு கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் தலைமை தாங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட விதை மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு விதைப்பண்ணை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து பேசுகையில், விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வட்டாரத்தில் பணிபுரியும் உதவி விதை அலுவலர் மூலம் பெற்று விதை பண்ணை அமைக்க வேண்டும் என்றும், விதைக்கும் முன் உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான் கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் அதிக அளவு பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்க முடியும் என்றும் கூறினார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பயிற்சி ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர்கள் நாகராஜ் மற்றும் சிவக்குமார் ஆத்மா உதவி அலுவலர் கவியரசன் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News