உள்ளூர் செய்திகள்

சுற்றுலாத் தலமாக முத்துக்குடா தீவு

Published On 2022-06-08 14:39 IST   |   Update On 2022-06-08 14:39:00 IST
  • படகு சவாரி, தங்கும் விடுதியுடன்முத்துக்குடா தீவு சுற்றுலாத் தலமாகிறது
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.


புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.81.13 கோடி மதிப்பில் இதுவரை நிறைவடைந்த 138 திட்டப்பணிகளை ெதாடங்கி வைக்க உள்ளார்.

மேலும் ரூ.164.85 கோடி மதிப்பிலான 1,394 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதில் 47,278 பயனாளிகளுக்கு ரூ.368.46 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

அனைவருக்கும் வீடு வழங்கு திட்டத்தின் கீழ் நகர்ப்புறத்தில் 550 பயனாளிகளுக்கு ரூ.23.47 கோடி மதிப்பிலும் ஊரகப் பகுதிகளில் 10,916 பயனாளிகளுக்கு ரூ.261.96 கோடி மதிப்பிலும் வீடுகள் வழங்கப்படவுள்ளன.

புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு பொறுப்பேற்றவுடன் சுற்றுலாத்தலம் உருவாக்குவதற்காக மாவட்ட சுற்றுலா அலுவலர்களுடன் சென்று பல்வேறு இடங்களை கடந்த ஆண்டு ஆய்வு செய்தார். அதில் கட்டுமாவடியில் இருந்து அரசங்கரை வரை சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு கடற்கரையை கொண்டுள்ள

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார் கோவில் வட்டம் நாட்டாண புரசங்குடி ஊராட்சி முத்துக்குடா தீவை சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து அரசுக்கு கருத்து அனுப்பியுள்ளார். மேலும் இத்தட்டம் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அலையாத்திக் காடுடன் தீவு போன்று உள்ள முத்துக்குடாவில் படகு சவாரியும், தங்கும் விடுதியு ஏற்படுத்தப்பட உள்ளது. ரூ.3 கோடியிலான இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags:    

Similar News