மரத்தில் வேன் மோதி டிரைவர் படுகாயம்
- கறம்பக்குடியில் மரத்தில் வேன் மோதி டிரைவர் படுகாயம் அடைந்தார்
- போலீசார் டிரைவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கறம்பக்குடி,
தஞ்சாவூர் மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி அருகே புதுவளசலில் உள்ள மாமனார் வீட்டிற்கு வேனை ஓட்டிச் சென்றார். கறம்பக்குடி பெரிய அக்னி ஆற்றுப் பாலம் அருகே சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனில் சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் சுதாகரை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் இந்த விபத்து குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்