உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி சந்தைபேட்டையில் தற்காலிக அரசு கல்லூரி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும்-இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

Published On 2023-07-06 13:24 IST   |   Update On 2023-07-06 13:24:00 IST
  • ஆலங்குடி சந்தைபேட்டையில் தற்காலிக அரசு கல்லூரி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது
  • இப்பகுதியில் திருமண மண்டபம் மற்றும் கோவில் அமைந்துள்ளது.

ஆலங்குடி,

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் சொர்ண குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கீழாத்தூர் சமத்துவபுரம் அருகே கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டிடமான பணிகள் நிறைவடையும் வரை ஆலங்குடி சந்தை பேட்டை பகுதியில் தற்காலிகமான கல்லூரி இயங்கி வருகிறது.

இப்பகுதியில் திருமண மண்டபம் மற்றும் கோவில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் அதிக அளவில் இப்பகுதியில் சாலையை கடந்து செல்கின்றனர். புதுக்கோட்டை ஆலங்குடி மெயின் ரோட்டில் இந்த இடம் உள்ளதால் பேருந்து மற்றும் கார் லாரி போன்ற வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்கின்றது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News