உள்ளூர் செய்திகள்

அக்கா உடலை பார்த்து அழுத்த தம்பி உயிரிழப்பு

Published On 2023-06-24 13:03 IST   |   Update On 2023-06-24 13:03:00 IST
  • அக்கா உடலை பார்த்து அழுத்த தம்பி உயிரிழந்தார்
  • போஸ் வெங்கட் சின்ன த்திரையில் பல்வேறு நாடக ங்களிலும், திரைப்படங்க ளிலும் நடித்துள்ளார்.

அறந்தாங்கி,

புதுக்கோட்ைட மாவட்டம் அறந்தாங்கி அருகே பாண்டிபத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு வளர்மதி (வயது 54) என்ற மகளும், ரங்கநாதன் (52) போஸ் வெங்கட் என்ற மகன்களும் உள்ளனர். போஸ் வெங்கட் சின்ன த்திரையில் பல்வேறு நாடக ங்களிலும், திரைப்படங்க ளிலும் நடித்துள்ளார். வளர்மதி திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.அவரது கணவர் குணசேகரன் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வளர்மதி உயிரிழந்தார். இந்த செய்தியறிந்ததும் அறந்தாங்கியில் இருந்து சகோதரர் ரங்கநாதன் புறப்பட்டு சென்னைக்கு சென்றார்.

அங்கு சகோதரி உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் கதறியழுத அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த ரங்கநாதன் சிறிது நேரத்தில் இறந்தார். இறந்த ரங்கநாதன் இன்சூ ரன்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஹேமா மாலினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். வளர்மதி உடலுக்கு நேற்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ரங்கநாதன் உடல் சொந்த ஊர் அறந்தாங்கிக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை இறுதி சடங்கு நடக்கவுள்ள தாக உறவினர்கள் தெரிவி த்தனர். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் அக்காவும், தம்பியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோக த்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News