உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே பெண் மாயம்

Published On 2023-02-10 15:04 IST   |   Update On 2023-02-10 15:04:00 IST
  • ஆலங்குடி அருகே பெண் மாயமானார்
  • இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் ஊராட்சி சின்னையாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகள் ஐஸ்வர்யா (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 6 தேதி வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இவரது பெற்றோர் உற்றார் உறவினர்களிடம் கேட்டு தேடி பார்த்தனர். ஐஸ்வர்யா எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து செம்பட்டிவிடுதி போலீசில் அவரது தந்தை புஷ்பம் புகார் மனு கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகிறார்.


Tags:    

Similar News