உள்ளூர் செய்திகள்
3 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து சாவு
- விளையாடிக் கொண்டிருந்த போது சம்பவம்
- 3 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி படுதினிபட்டியை சேர்ந்தவர் அழகப்பன். இவருடைய மூன்று வயது மகன் ராகுல். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ராகுல் திடீரென மாயமானதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் தேடினர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் சிறுவன் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுள் இறங்கி சிறுவன் உடலை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.