உள்ளூர் செய்திகள்

குடிநீர் விநியோகம் குறித்து புதுக்கோட்டையில் ஆய்வு

Published On 2023-03-19 13:19 IST   |   Update On 2023-03-19 13:19:00 IST
  • புதுக்கோட்டைக்கு 10 எம்எல்டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க திட்டம்
  • குடிநீர் வடிகால் வாரியத்திடம் புதுக்கோட்டை நகராட்சி கொடுத்த புகாரை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் முடிவு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சியில் நகர்முழுவதும் குடிதண்ணீர் வழங்க தக்க நடவடிக்கையை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன் உட்பட ஆகியோர் எடுத்து வரும் நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்திடம் புதுக்கோட்டை நகராட்சி சார்பாக புகார் மனு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூடுதல் முதன்மை பொறியாளர் லிங்கமூர் த்தி தலைமையில் திருச்சி முதன்மை பொறியாளர் மாதவன், புதுக்கோட்டை செயற் பொறியாளர் அயனன் உதவி செயற் பொறியாளர்கள் கருப்பையா மற்றும் ஜெயசந்திரன் ஆகியோர் குடி நீர் வடிகால் வாரியம் மூலமாக புதுக்கோட்டை நகராட்சிக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விநியோகம் குறித்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்க்கொண்டனர் . இதுகுறித்து புதுக்கோட்டை நர்மன்ற தலைவர் அரங்கில் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தாவது:- தற்போது புதுக்கோட்டை நகராட்சிக்கு குடிதண்ணீர் 1 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதை 10 எம்எல்டி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றனர். மேலும் கோடை காலத்தை முன்னிட்டு உர்pய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தனர் . பேட்டியின் போது நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், குடிநீர் வடிகால் வாரிய கூடுதல் முதன்மை பொறியாளர், லிங்கமூர் த்தி, பொறியாளர் கள் மாதவன், அயனன், கருப்பையா, ஜெயசந்திரன், நகர்மன்ற துணைத்தலைவர், லியாகத்அலி, ஆணையர், நாகராஜன், பொறியாளர், சேகரன், நகர்மன்ற உறுப்பினர் ,பழனிவேல் உட்பட பலர் இருந்தனர்.




Tags:    

Similar News