உள்ளூர் செய்திகள்

இறந்தவர் உடலுடன் போராட்டம்

Published On 2023-03-12 08:09 IST   |   Update On 2023-03-12 08:09:00 IST
  • மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது
  • பாதை வசதி செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை தாலுக்கா முரட்டு சோலகம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி மூக்காயி வயசு 90 இந்த நிலையில் இவர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் வீட்டில் இறந்த இறந்தவர் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்த மூக்காயின் உடலை கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் தகவல் அறிந்த கந்தர்வகோட்டை ஆய்வாளர் செந்தில் மாறன் இறந்த மூதாட்டியும் உடலை எடுத்துச் செல்ல பாதை வசதி செய்வது தருவதாக உறுதி அளித்ததை அடுத்து இறந்த மூதாட்டி உடலை கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மூக்காயின் கணவர் முருகன் இறந்த பொழுது இதே மயான பாதை பிரச்சனை ஏற்பட்டது எனவே மாவட்ட ஆட்சியர் மயானத்திற்கு உரிய பாதையை எடுத்துக் கொடுத்து சாலை வசதி செய்து தரக் கோரி அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News