உள்ளூர் செய்திகள்

மாட்டு பொங்கல் கொண்டாட்டம்

Published On 2023-01-17 11:04 IST   |   Update On 2023-01-17 11:04:00 IST
  • மாடுகளை அலங்கரித்து சிறப்பு பூஜை
  • கிராமப்புறங்களில் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

புதுக்கோட்டை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் வீடுகளில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறையில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு அமைப்பினர் பாரம்பரிய விளையாட்டுகள், கலைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். தொடா்ந்து நேற்று மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகளில் பசு மாடுகள், காளைகள் வளர்ப்பவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி கொண்டாடினர். மாடுகள், காளைகளை குளிப்பாட்டி அதற்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் மிட்டு அலங்கரித்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். மேலும் பொங்கலை மாடுகள், காளைகளுக்கு கொடுத்தனர். கிராமப்புறங்களில் ஒரே இடத்தில் மொத்தமாக சேர்ந்து பொங்கல் வைத்து கிராமத்து தெய்வங்களை வழிபட்டனர். மேலும் பசுமாடுகள், காளைகளை அலங்கரித்து வரவழைத்து அதனை பூஜைக்கு பின் அவிழ்த்து விட்ட நிகழ்வு நடைபெற்றது. 

Tags:    

Similar News