உள்ளூர் செய்திகள்
பெருங்களூர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- பெருங்களூர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- 200 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இரத்த சோகை உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வட்டாரம் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்து முதல் பத்தொன்பது வயதிற்குட்பட்ட வளரும் இளம் பருவத்தினர்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பள்ளி தலைமை ஆசிரியர் ரவி முன்னிலையில் வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் தொடங்கி வைத்தார். 200 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இரத்த சோகை உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை, பல் பரிசோதனைகளும் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர். வைத்திலிங்கம், சமுதாய சுகாதார செவிலியர்.சுமிதா ஜான்சி, என்.எஸ்.எம்.வேலுசாமி, மற்றும் மருத்துவ அலுவலர் வெண்ணிலா, பல் மருத்துவ அலுவலர்திலீபா, ஆய்வக நுட்புணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.